தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் படிப்பிற்கான கலந்தாய்வு: 1,058 மாணவ மாணவியர் பங்கேற்பு

வேளாண் படிப்பிற்கான கலந்தாய்வு: 1,058 மாணவ மாணவியர் பங்கேற்பு

வேளாண் படிப்பிற்கான கலந்தாய்வு: 1,058 மாணவ மாணவியர் பங்கேற்பு


UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM

ADDED : ஜூலை 15, 2014 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM ADDED : ஜூலை 15, 2014 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வில் நேற்று 1,058 பேர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2014 - 15ம் கல்வி ஆண்டில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பு மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கான மூன்று நாள் கலந்தாய்வு நேற்று துவங்கியது. பல்கலைக்கு வரப்பெற்ற 11 ஆயிரத்து 647 விண்ணப்பங்களில் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் தகுதி உடையவையாக கருதப்பட்டன.

இந்த விண்ணப்பங்களுக்கு மாணவர்கள் ரேண்டம் எண் வழங்கப்பட்டு, தரவரிசை அடிப்படையில் 2,920 மாணவ மாணவியருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று 38 ஊனமுற்ற மாணவர்கள் உட்பட 1,058 பேர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று 963 மாணவர்களும், மூன்றாம் நாளான நாளை 906 மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

கலந்தாய்வில் 196.50 கட் - ஆப் மதிப்பெண் பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷிணி முதலிடமும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி தரணி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரணிதரன் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடத்தைப் பிடித்தனர். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை சான்று வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us