தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரபி பாடசாலையில் தங்கியிருந்த 12 மாணவியர் உணவு ஒவ்வாமையால் மயக்கம்

அரபி பாடசாலையில் தங்கியிருந்த 12 மாணவியர் உணவு ஒவ்வாமையால் மயக்கம்

அரபி பாடசாலையில் தங்கியிருந்த 12 மாணவியர் உணவு ஒவ்வாமையால் மயக்கம்


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கத்தில் உள்ள அரபி பாடசாலையில் தங்கி யிருந்த, 12 மாணவியர், உணவு ஒவ்வாமையால் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி தெருவில், அரபி பாடசாலை ஒன்று உள்ளது. அங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், 15 வயது முதல், 20 வயது வரை உள்ள, 50க்கும் அதிகமான பெண்கள் தங்கி படிக்கின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, வாந்தி, பேதியால் மயக்கமடைந்த, 12 மாணவியர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர் களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு ஒவ்வாமையால் அவர்கள் மயக்கமடைந்ததாக, ஆதம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த மையத்தை நேற்று ஆய்வு செய்தனர். அங்கு வழங்கப்படும் குடிநீரின் மாதிரியை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us