தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ எழுத்தறிவு திட்டத்தில் 14,000 பேருக்கு கல்வி

எழுத்தறிவு திட்டத்தில் 14,000 பேருக்கு கல்வி

எழுத்தறிவு திட்டத்தில் 14,000 பேருக்கு கல்வி


UPDATED : ஆக 27, 2026 07:46 PM

ADDED : ஆக 27, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:46 PM ADDED : ஆக 27, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கல்வி கற்காத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், மத்திய அரசு 2022ல் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

திட்டத்தில், நடப்பாண்டு 13,987 பேர் அடையாளம் காணப்பட்டு, பயிற்சி அளிக்க 598 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு, எளிதில் புரியும் வகையில் பாடங்களை கற்பிக்கும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழில் எளிய எழுத்துகள், எழுத்து ஒலி மற்றும் வடிவங்களை அறிதல், எழுதிப் பழகுதல், அன்றாட பயன்பாட்டு சொற்களை வாசித்தல், எளிய வாக்கியங்கள் ஆகியவற்றுடன், எண்கள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பணப் பரிவர்த்தனை, அளவீடுகள், நேரம், காலண்டர் உள்ளிட்ட அடிப்படை கணிதமும் கற்பிக்கப்படுகிறது.

ஆரோக்கியம், உடற்பயிற்சி, புகைப்பழக்கத்தின் தீமைகள், பேரிடர் பாதுகாப்பு, அரசு நலத்திட்டங்கள், சட்ட விழிப்புணர்வு மற்றும் நிதி சார்ந்த வாழ்க்கைத் திறன்களும் பயிற்றுவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us