தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்தி கிராமம் பல்கலைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய யு.ஜி.சி.

காந்தி கிராமம் பல்கலைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய யு.ஜி.சி.

காந்தி கிராமம் பல்கலைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய யு.ஜி.சி.


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: பன்னாட்டு அளவில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த, காந்தி கிராமம் பல்கலைக்கு, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) ரூ.1.5 கோடி நிதி வழங்கியுள்ளது.

பன்னாட்டு அளவில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கும் பல்கலைகளுக்கு யு.ஜி.சி., நிதியுதவி அளிக்கிறது. இந்த நிதி 3 பிரிவுகளில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 2 கட்டமாக வழங்கப்படும் நிதி மூலம் 5 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

முதல் பிரிவான டி.ஆர்.எஸ்.,ல், காந்திகிராமம் பல்கலை வேதியியல் துறைக்கு ரூ.33 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிதி மூலம் 340 ஆராய்ச்சி கட்டுரைகளை வேதியியல்துறை சமர்ப்பித்தது. இவை, பன்னாட்டு அளவில் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டதால், 2 வது கட்டமாக ரூ.1.5 கோடியை வழங்கியுள்ளது.

இந்த நிதி மூலம், நானோ, அரிமானம், உலோக மாசு, நீர் மாசு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வேதியியல்துறை தலைவர் சேதுராமன், பேராசிரியர் ஆப்ரகாம் ஜான் கூறியதாவது: ஒதுக்கிய நிதியில், உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடி, ஆய்வகங்களை சீரமைக்க ரூ.25 லட்சம், ஆய்வக பயன்பாடு, மாநாட்டிற்கு ரூ.25 லட்சம் செலவழிக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us