தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு; 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு; 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு; 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்


UPDATED : அக் 08, 2020 12:00 AM

ADDED : அக் 08, 2020 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2020 12:00 AM ADDED : அக் 08, 2020 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு; உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்புகளுக்கு, 2020 - -21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, நாளை மாலை, 6:00 மணி கடைசி நாள்.
இந்த படிப்புகளுக்கு, இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாட்டு வாழ் இந்திய மாணவர்கள் எனப்படும், என்.ஆர்.ஐ., மாணவர்கள் விண்ணப்பிக்க, வரும், 23ம் தேதி கடைசி நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us