தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: நவ.,15க்குள் விண்ணப்பிக்க கெடு

ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: நவ.,15க்குள் விண்ணப்பிக்க கெடு

ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: நவ.,15க்குள் விண்ணப்பிக்க கெடு


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வுக்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கலை, மனிதநேயம், சமூக அறிவியல் பிரிவில், 60; அறிவியல் பிரிவில், 60 மாணவர்களுக்கு, ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.மாதம், 25,000 ரூபாய் வீதம், 2 ஆண்டுகளுக்கும்; அதன்பின், மாதம், 28,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us