UPDATED : மே 12, 2025 12:00 AM
ADDED : மே 12, 2025 05:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், கடந்த, 9ம் தேதி முதல் நடக்கவிருந்த சி.ஏ., தேர்வுகள், போர் சூழல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.
இத்தேர்வுகள் வரும் 16ம் தேதி துவங்கி, 18, 22, 24ம் தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே, பகல் 2:00 மணிக்கு தேர்வு துவங்கும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள், மாற்றி அமைக்கப்பட்ட தேதிகளுக்கு செல்லும் என, ஐ.சி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

