தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பு: விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பு: விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பு: விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைப்பு


UPDATED : ஆக 16, 2013 12:00 AM

ADDED : ஆக 16, 2013 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2013 12:00 AM ADDED : ஆக 16, 2013 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த, அருண்மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மகள் சாருமதி, பிளஸ் 2வில், 1,164 மதிப்பெண் பெற்றுள்ளார். நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன். மருத்துவப் படிப்புக்கான, முதல் கட்ட கவுன்சிலில், 1,823 இடங்களுக்கு நடந்தது.பொதுப் பிரிவில், 565 பேர், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 483; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 365 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற பிரிவினரையும் சேர்த்து, 1,823 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மாதம், 6ம் தேதி, அடுத்த கட்ட கவுன்சிலிங் துவங்கியது. பொதுப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்க, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எவரும் இல்லை. ஏனென்றால், முதல் கட்ட கவுன்சிலிங்கில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கின் போது, 2,291வது ரேங்க் வரை, எம்.பி.சி., மாணவர்கள் இல்லை.

உதாரணத்துக்கு, 1,336 வது வரிசையில் இருந்த, எம்.பி.சி., மாணவனுக்கு, முதல் கட்ட கவுன்சிலிங்கில், பொதுப் பிரிவில் இடம் கிடைக்கவில்லை; எம்.பி.சி., பிரிவில், இடம் கிடைத்தது.

அவருக்கு அடுத்த வரிசையில் இருந்த, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு, இரண்டாவது கவுன்சிலிங்கின் போது, பொதுப் பிரிவில் இடம் கிடைத்தது. தவறான நடைமுறையை பின்பற்றியதால், என் மகளுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்டது. எம்.பி.சி., 74; ஆதிதிராவிடர், 13; அருந்ததியினர், 2; பி.சி.எம்., (முஸ்லிம்) 17, ஆகியோர், அந்தந்த ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், அவர்கள், பொதுப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.

எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். அடுத்த கட்ட கவுன்சிலிங்குக்கு தடை விதிக்க வேண்டும். எம்.பி.சி., ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்குக்கு, எந்த எண்ணிக்கையில் வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு, பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருத வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், கே.பாலு ஆஜரானார். விசாரணையை, இம்மாதம், 19ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதுவரை மேற்கொள்ளப்படும் தேர்வானது, மனு மீதான இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us