UPDATED : ஏப் 15, 2024 12:00 AM
ADDED : ஏப் 15, 2024 10:22 AM

சிவகங்கை:
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர், ஆசிரியர்கள் ஏப்., 19 அன்று அந்தந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணி சான்றினை பெற்று ஓட்டளிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம். இந்த தொகுதியில் பணிபுரிபவராக இருப்பின் படிவம் 12 ஏ, வேறு தொகுதி வாக்காளர்கள் படிவம் 12 ன் படி விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. படிவம் 12 பெற்ற இத்தொகுதியை சேர்ந்த பிற மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ், அரசு ஊழியர்கள் ஏப்., 11 முதல் 13 வரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தபால் ஓட்டு சேவை மையத்தில் தபால் ஓட்டினை நேரில் செலுத்தலாம்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பிற தொகுதியை சேர்ந்த அரசு அலுவலர், ஆசிரியர்களில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் ஒன்று முதல் 3 வரையிலானவர்கள் அந்தந்த பயிற்சி மையங்களில் செயல்படும் தபால் ஓட்டு சேவை மையங்களில் ஏப்., 13 அன்று அடையாள சான்றினை சமர்பித்து தபால் ஓட்டினை அளிக்கலாம்.
இத்தொகுதியில் பணிபுரிந்து தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஏப்., 7 அன்று பயிற்சி மையத்தில் வழங்கிய தேர்தல் பணி உத்தரவை பெற்று, ஏப்., 19 அன்று பணிபுரியும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.