தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவம் படிக்க 19,000 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவம் படிக்க 19,000 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவம் படிக்க 19,000 பேர் விண்ணப்பம்


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
தமிழகத்தில், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, மூன்று நாட்களே அவகாசம் உள்ள நிலையில், நேற்று வரை, 19,044 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வராஜ் அளித்த பேட்டி:
பல்கலையின் கீழ் செயல்படும் ஏழு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு, 660 இடங்கள் உள்ளன. இதுதவிர, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், பி.டெக்., என்ற மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளுக்கு, 100 இடங்களும் உள்ளன. இவற்றுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 12ம் தேதி துவங்கி, வரும், 30ம் தேதி முடிகிறது. நேற்றுவரை, 19,044 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் அதிகம்.விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய, ஜூலை 1 முதல் 4 வரை அவகாசம் தரப்படும். ஜூலை மூன்றாம் வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். மற்ற மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.627 இடங்கள் வீண்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம் பெற்ற பின், மருத்துவம் படிக்க சென்றதால், கடந்த ஆண்டில், அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 627 இடங்கள் மாணவர் இன்றி வீணாகியுள்ளது. இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் காலியிடம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில், மருத்துவ கவுன்சிலிங் துவங்கிய பிறகே, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us