தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரு கட்டங்களாக பிளஸ் 2 தேர்வு? தமிழகத்துக்கு மத்திய அரசு யோசனை!

இரு கட்டங்களாக பிளஸ் 2 தேர்வு? தமிழகத்துக்கு மத்திய அரசு யோசனை!

இரு கட்டங்களாக பிளஸ் 2 தேர்வு? தமிழகத்துக்கு மத்திய அரசு யோசனை!


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசு தெரிவித்த யோசனையின்படி, பிளஸ் 2 தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், மகேஷ் அளித்த பேட்டி:

பள்ளி மாணவர்களுக்கான, &'ஆன்லைன்&' வகுப்புகளில் எந்த முறைகேடுகளும், விதிமீறல்களும் நடக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் கல்விக்கு, பல்வேறு விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிகளால் சரியாக கடை பிடிக்கப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.
வரும் நாட்களில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற ஆசிரியர்களும், பள்ளிகளும் அறிவுறுத்தப்படுவர். சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க, தனியாக குழு அமைக்கப்படும். அதே போல, ஆசிரியைகள் அளிக்கும் புகார்களை விசாரிக்க, &'விசாகா&' கமிட்டி அமைக்கப்படும். பிளஸ் 2 தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு, மத்திய அரசின் கூட்டத்தில், சில யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு முறை பிளஸ் 2 தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளை, தமிழக அரசு தனியாக தயார் செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வரின் ஒப்புதல் பெற்றதும், வழிமுறைகள் அறிவிக்கப்படும். கொரோனா பரவல் முடிந்த பின், பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு மையத்துக்கு வந்து, வீட்டுக்கு செல்லும் வரை, அரசு தரப்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். &'நீட்&' நுழைவு தேர்வு வேண்டாம் என்பதே, எங்களின் கருத்து. நீட் தேர்வு குறித்து, சட்டசபை கூடி தீர்மானம் நிறைவேற்றும். பள்ளி கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக, நிர்வாக ரீதியாக முதல்வர் எடுத்த முடிவை மாற்ற இயலாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us