தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர் சேர்க்கை: 2ம் கட்ட கலந்தாய்வு விபரம் அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கை: 2ம் கட்ட கலந்தாய்வு விபரம் அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கை: 2ம் கட்ட கலந்தாய்வு விபரம் அறிவிப்பு


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை (ஜூலை 21) முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் விடுபட்ட இடங்கள் என 253 இடங்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இந்த கவுன்சிலில் நடைபெறும்.

அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களில் பொதுப் பிரிவுக்கு 47 இடங்கள், பி.சி. 49, பி.சி. (முஸ்லிம்) 5, எம்.பி.சி. 30, எஸ்.சி. 25, எஸ்.சி. (அருந்ததியினர்) 5, பழங்குடியினர் 2 இடங்கள் உள்ளன.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவு 20, பி.சி. 17, பி.சி. (முஸ்லிம்) 2, எம்.பி.சி., 13, எஸ்.சி, 10, எஸ்.சி., (அருந்ததியினர்) 2, எஸ்.டி. 1 இடம் உள்ளது.

சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் 1, கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் 2, சென்னை கற்பக விநாயகர் கல்லூரியில் 5, கோவை கற்பகம் கல்லூரியில் 7, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 4, மதுரை வேலம்மாள் கல்லூரியில் 6 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

மருத்துவம் கட் ஆப்

2ம் கட்ட கவுன்சிலிங்கில் கட்ஆப் பொதுப் பிரிவு மற்றும் பிற்பட்டோர் பிரிவில் 199.25 முதல் 198.25 வரை உள்ளது. இதில் பி.சி. முஸ்லிம் 197 வரை; எம்.பி.சி. 197.5 வரை; எஸ்.சி. 194.25 வரை; எஸ்.சி. (அருந்ததியினர்) 191.5 வரை; எஸ்.டி. 186.5 வரை பங்கேற்பர்.

பல் மருத்துவம் கட் ஆப்

பல் மருத்துவத்திற்கு ஜூலை 22 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதற்கான கட் ஆப் வருமாறு: பொதுப் பிரிவு 197.75, பி.சி., (முஸ்லிம்) 196.5, எம்.பி.சி., 196.5, எஸ்.சி., 192.25, எஸ்.சி., (அருந்ததியினர்) 189, எஸ்.டி., 181 வரை பங்கேற்பர். பிளஸ்2 மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு, மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us