UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 'ஸ்பான்ஷர்டு ரிசர்ச் அண்டு கன்சல்டன்சி' மையம் மாணவர் புத்தாக்க திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்:
அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், மையங்கள், கல்வி நிறுவனங்கள், மண்டல வளாகங்கள் மற்றும் பல்கலை கல்லூரிகளில் 5ம் அல்லது 7ம் பருவத்தில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிதி உதவி:
தேர்வு செய்யப்படும் மாணவர் புத்தாக்க திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 25
விபரங்களுக்கு:
https://www.annauniv.edu/events.php