UPDATED : அக் 28, 2025 04:39 PM
ADDED : அக் 28, 2025 04:41 PM

சென்னை:
சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூவர் தேசிய அறிவியல் விருது 2025-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் சிறப்பான பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த உயரிய விருது, நாட்டின் மிகப்பெரிய அறிவியல் அங்கீகாரங்களில் ஒன்றாகும். விருது பெற்றதன் மூலம், சென்னை ஐஐடி நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் புதுமை மையமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.
இந்த விருதுகள் மத்திய அரசால் விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் விஞ்ஞான் டீம் ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இதில், பேராசிரியர் தலப்பில் பிரதீப் 'விஞ்ஞான் ஸ்ரீ' விருதும், மோகன சங்கர் சிவப்பிரகாசம் மற்றும் ஸ்வேதா பிரேம் அகர்வால் 'விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதும் பெற்றுள்ளனர்.
மூவருக்கும் வாழ்த்து தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “இது அவர்களுடைய தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; சென்னை ஐஐடி-யின் புதுமை மற்றும் ஆராய்ச்சி திறனுக்கான பெருமைச் சின்னமாகும்” என்று தெரிவித்தார்.

