தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரிக்கு தன்னாட்சி ரத்து 21 பேருக்கு நோட்டீஸ்

கல்லுாரிக்கு தன்னாட்சி ரத்து 21 பேருக்கு நோட்டீஸ்

கல்லுாரிக்கு தன்னாட்சி ரத்து 21 பேருக்கு நோட்டீஸ்


UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM

ADDED : ஜூன் 25, 2023 03:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM ADDED : ஜூன் 25, 2023 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி:
திருச்சி ஈ.வெ.ரா., அரசு கல்லுாரியின் தன்னாட்சி அந்தஸ்து ரத்தானது தொடர்பாக விளக்கம் கேட்டு கல்லுாரி முன்னாள் முதல்வர் உட்பட 21 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.திருச்சி காஜாமலையில் ஈ.வெ.ரா., அரசுக்கல்லுாரிக்கு 1999ல் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. 2020 டிசம்பரில் தன்னாட்சி அந்தஸ்தை, கல்லுாரி நிர்வாகம் புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது இருந்த கல்லுாரி நிர்வாகிகள் செய்யவில்லை. இதனால் 2021ல் கல்லுாரியின் தன்னாட்சி அந்தஸ்து ரத்தாகி விட்டது. இதை தாமதமாக தெரிந்து கொண்ட தற்போதைய கல்லுாரி நிர்வாகம், தேவையான ஆவணங்களுடன், தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்க விண்ணப்பித்தது.ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்ததால், அதை யூ.ஜி.சி., ஏற்க மறுத்தது. இதனால் தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்க முடியாமல், தற்போது படிக்கும் 5,000 மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லுாரியின் தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்க தவறிய அப்போது கல்லுாரி முதல்வராக இருந்த சுகந்தி, தேர்வு நெறியாளர் வாசுதேவன், துணை தேர்வு நெறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 பேரிடம் விளக்கம் கேட்டு தற்போதைய கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us