தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கலந்தாய்வு: 21, 30ம் தேதிகளில் துவக்கம்

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கலந்தாய்வு: 21, 30ம் தேதிகளில் துவக்கம்

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கலந்தாய்வு: 21, 30ம் தேதிகளில் துவக்கம்


UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM

ADDED : ஜூலை 15, 2014 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM ADDED : ஜூலை 15, 2014 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் எம்.சி.ஏ. படிப்புக்கு வரும் 21ம் தேதியும், எம்.பி.ஏ. படிப்புக்கு வரும் 30௦ம் தேதியும் கவுன்சிலிங் துவங்குகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு இன்ஜி. கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பதற்கு டேன்செட் நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப வினியோகம் மாநிலத்திலுள்ள 43 மையங்களில் ஜூன் மாதம் நடந்தது. ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் எம்.சி.ஏ. படிப்புக்கும் வரும் 21ம் தேதியும், எம்.பி.ஏ. படிப்புக்கு வரும் 30ம் தேதியும் கவுன்சிலிங் துவங்குகிறது.

அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா நிருபர்களிடம் கூறியதாவது: எம்.சி.ஏ. படிப்புக்கு கவுன்சிலிங் வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது; முதல் நாள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடக்கிறது. எம்.பி.ஏ. படிப்புக்கு 30ம் தேதி முதல் ஆக. 14ம் தேதி வரை நடக்கிறது; 30ம் தேதி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இடம்பெறுகிறது.

இக்கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் எம்.பி.ஏ. படிப்புக்கு 9,502 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன; 88 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்ட நிலையில் 9,414 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்போர் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வரவேண்டும். அண்ணா பல்கலை கீழுள்ள உறுப்பு கல்லூரிகள், மண்டல மையங்களில் பயில விரும்புபவர்களும் கோவையில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர். மேலும் பெரியார் பல்கலை, மனோன்மனியம் பல்கலை, சென்னை பல்கலை, மதர் தெரசா பல்கலை ஆகியவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பயில விரும்புபவர்களும், கோவையில் பங்கேற்கவுள்ளனர்.

கவுன்சிலிங்கில் பங்கேற்க நேரடியாகவோ அல்லது டி.டி. மூலமாகவோ கட்டணமாக செலுத்த வேண்டும். டி.டி.யாக செலுத்துபவர்கள் The secretary, tn MBA, MCA admission 2014, GCT, cbe என்ற முகவரிக்கு செலுத்த வேண்டும்.

எம்.சி.ஏ. கவுன்சிலிங்கில் ரெகுலர் அண்ட் லேட்டரல் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் தேதியில் பங்கேற்கலாம்.

விண்ணப்பித்த அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. ரேங்க் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களுக்கும் www.gct.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us