தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு: 23ம் தேதி கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்பு: 23ம் தேதி கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்பு: 23ம் தேதி கலந்தாய்வு


UPDATED : ஆக 14, 2013 12:00 AM

ADDED : ஆக 14, 2013 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2013 12:00 AM ADDED : ஆக 14, 2013 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, வரும், 23ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,), மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி.,), உணவு தொழில்நுட்பம் (பி.டெக்.,), கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (பி.டெக்.,) உள்ளிட்ட, இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கால்நடை மருத்துவ படிப்பில், 280 இடங்களும், மீன்வள படிப்பில், 40 இடங்களும், உணவு தொழில்நுட்ப படிப்பிற்கு, 20 இடங்களும், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்பிற்கு, 20 இடங்கள் என, மொத்தம், 360 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான கலந்தாய்வு, சென்னை, வேப்பேரி, கால்நடை மருத்துவ கல்லூரியில், வரும், 23ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள, தகுதியுடையவர்களுக்கு விண்ணப்ப கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.

"கட்-ஆப்" மதிப்பெண் பெற்று, அழைப்பு கடிதம் கிடைக்காத மாணவர்கள், நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள், www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள், கடந்தாண்டு துவங்கப்பட்டன. இரண்டு கல்லூரிகளில், மொத்தம், 80 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலிடம், பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது.

புதிய கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை, கால்நடை மருத்துவ கவுன்சில், கலந்தாய்வு தேதி முன் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறது. கலந்தாய்விற்கு முன் வரவில்லையெனில், அனுமதி கிடைத்தவுடன், இந்த இடங்களுக்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us