sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆன்லைனில் பணம் இழந்தால் 24 மணி நேரத்தில் புகார் அவசியம்

/

ஆன்லைனில் பணம் இழந்தால் 24 மணி நேரத்தில் புகார் அவசியம்

ஆன்லைனில் பணம் இழந்தால் 24 மணி நேரத்தில் புகார் அவசியம்

ஆன்லைனில் பணம் இழந்தால் 24 மணி நேரத்தில் புகார் அவசியம்


UPDATED : பிப் 11, 2026 08:31 AM

ADDED : பிப் 11, 2026 08:32 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 08:31 AM ADDED : பிப் 11, 2026 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'ஆன்லைன்' வாயிலாக, சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள், 1930 என்ற எண்ணை, 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு, புகார் பதிவு செய்ய வேண்டும்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

சைபர் குற்றவாளிகளிடம், 'ஆன்லைன்' வாயிலாக இழந்த பணத்தை முடக்கி வைக்கவும், அவற்றை மீட்கவும், பாதிக்கப்பட்ட நபர்கள், இரண்டு மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு, புகார் அளிக்க வேண்டியது, மிகவும் அவசியம்.

இதை நாங்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என, அழைக்கிறோம். குறைந்தபட்சம், 24 மணி நேரத்திற்குள்ளாவது, 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில், புகார்களை பதிவு செய்ய வேண்டும்.

சைபர் குற்றவாளிகள், மோசடி செய்த பணத்தை மிக வேகமாக, அடுத்தடுத்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி விடுகின்றனர். பண பரிவர்த்தனையை, போலீசார் தடுப்பதற்கு முன், 'ஆன்லைன்' வாயிலாக பொருட்கள் வாங்கி விடுகின்றனர். கிரிப்டோ கரன்சிகளாகவும் மாற்றி விடுகின்றனர். இதனால், அந்த பணத்தை மீட்பது சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us