sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர் விளையாட்டு விழா ஜன.25, 27 க்கு மாற்றம்

/

இளைஞர் விளையாட்டு விழா ஜன.25, 27 க்கு மாற்றம்

இளைஞர் விளையாட்டு விழா ஜன.25, 27 க்கு மாற்றம்

இளைஞர் விளையாட்டு விழா ஜன.25, 27 க்கு மாற்றம்


UPDATED : ஜன 22, 2026 12:04 PM

ADDED : ஜன 22, 2026 12:06 PM

Google News

UPDATED : ஜன 22, 2026 12:04 PM ADDED : ஜன 22, 2026 12:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல்வர் இளைஞர் விளையாட்டு விழா போட்டிகள் ஜன., 25, 27க்கு மாற்றப்பட்டுள்ளன.

16 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளையோருக்கான 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம் இரட்டையர் பிரிவு, கயிறு இழுக்கும் போட்டிகளும், ஆடவருக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட், மகளிருக்கான எறிபந்து போட்டிகளும் நடக்க உள்ளன.

ஜன., 25 ம் தேதி அலங்காநல்லுார் ஒன்றியத்திற்கான போட்டிகள் சின்னஇலந்தைக்குளம் மினி ஸ்டேடியத்தில் நடக்கிறது. கள்ளிக்குடியில் அரசுப் பள்ளி, செல்லம்பட்டியில் தும்மக்குண்டு அரசு கள்ளர் பள்ளி, மேலுாரில் தெற்குத்தெரு அரசுப் பள்ளி, மதுரை மேற்கில் சத்திரப்பட்டி அரசுப்பள்ளி, உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி, மதுரை கிழக்கில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன.

ஜன., 27 ல் திருப்பரங்குன்றத்திற்கு சரஸ்வதி நாடார் கல்லுாரி, சேடப்பட்டிக்கு எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி பள்ளி, டி. கல்லுப்பட்டிக்கு பேரையூர் காந்திஜி நினைவுப்பள்ளி, கொட்டாம்பட்டியில் அரசுப்பள்ளி, வாடிப்பட்டியில் தாய் பள்ளி, திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரியில் போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்பும் தனிநபர், குழுக்கள் ஜன., 24க்குள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us