UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 06:25 AM
அ நிறம் | அளவு
சென்னை:
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு, ஆக., 26, 27ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக காவல் துறைக்கு 621 எஸ்.ஐ.,க்கள், தீயணைப்பு துறைக்கு நிலைய அதிகாரிகள் 129 பேரை தேர்வு செய்வது குறித்து, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 30 வரை பெறப்பட்டது. தற்போது, இப்பணிக்கான எழுத்து தேர்வு ஆக., 26, 27ல் நடைபெறும் என வாரியம் அறிவித்துள்ளது.
