தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு 262 அரசு பள்ளிகளில் துவக்கம்

எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு 262 அரசு பள்ளிகளில் துவக்கம்

எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு 262 அரசு பள்ளிகளில் துவக்கம்


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெற்றோரிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, கர்நாடகாவில் உள்ள 262 அரசு பள்ளிகளில் இந்தாண்டு செப்டம்பர் மாதம், 4 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான எல்.கே.ஜி.,  யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க அரசு அனுமதி அளித்துள்ளது.கர்நாடகாவில் 276 கர்நாடகா பப்ளிக் பள்ளி உட்பட 900 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், 664 பள்ளிகளை எஸ்.டி.எம்.சி., எனும் பள்ளி வளர்ச்சி கண்காணிப்பு கமிட்டி நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் 20 முதல் 30 மாணவ - மாணவியர் இருக்க வேண்டும். இவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு, 7,000 ரூபாயும்; உதவியாளருக்கு 5,000 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை அமல்படுத்த வேண்டும் என, பெற்றோரிடம் இருந்து அரசுக்கு தொடர் கோரிக்கை வந்தது. இதையடுத்து, பெங்களூரு தெற்கு 10; பெங்களூரு வடக்கில் 4 உட்பட மாநிலம் முழுதும் 262 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை செப்டம்பர் மாதத்தில் இருந்து துவக்க, எஸ்.டி.எம்.சி.,க்கு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், அங்கன்வாடிகள் இருந்தாலும் பலவற்றில் கல்வி அம்சம் குறைவாகவே உள்ளது. இருந்தாலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், அறிவியல்பூர்வமான பாடத் திட்டம், உள்கட்டமைப்பு வசதியை பெற்றோர் விரும்புகின்றனர் என்றனர். ஆனால், செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், அதற்குள் எப்படி இதை பெற்றோருக்கு தெரியப்படுத்தி, அவர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us