தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர் பணியிடங்களை நிரப்ப 28ம் தேதி கவுன்சிலிங்

டாக்டர் பணியிடங்களை நிரப்ப 28ம் தேதி கவுன்சிலிங்

டாக்டர் பணியிடங்களை நிரப்ப 28ம் தேதி கவுன்சிலிங்


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ்  கூறியிருப்பதாவது: மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள், நேர்காணல் மற்றும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை, 6009 டாக்டர் பணியிடங்கள், ஏற்கனவே நடந்த 20 கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 110 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கும், புதிதாக மேம்படுத்தப்பட்ட 75 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள நபர்களுக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது.

இம்மாதம் 28ம் தேதி, சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி மையத்தில், காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது. தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அன்று மாலையே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். நியமனம் பெற்றவர்கள் 15 தினங்களில், பணியில் சேர வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல், www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us