sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி சாதனை

மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி சாதனை

மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி சாதனை


UPDATED : மே 11, 2026 09:01 PM

ADDED : மே 11, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 09:01 PM ADDED : மே 11, 2026 09:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவில், மாணவன் பூங்காவியன், 600க்கு, 598 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி ஹரிவாசினி, 597 மதிப்பெண்ணுடன், 2ம் இடமும், மாணவி சந்தியா, 596 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், 595 மதிப்பெண்களுக்கு மேல், 3 பேரும், 590க்கு மேல், 10 பேரும், 580க்கு மேல், 24 பேரும், 570க்கு மேல், 41 பேரும், 550க்கு மேல், 100 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 266 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ள-னர்.

பாடவாரியாக, 100க்கு, 100 பெற்றவர்கள், ஆங்கிலத்தில் 1, கணிதம் 7, இயற்பியல் 2, வேதியியல் 5, உயிரியல் 6, கணினி அறிவியல் 15, வணிகவியல் 5, கணக்கியல் 3, பொருளியல் 4, வணிகக்கணிதம் 2, கணினி பயன்பாடு பாடத்தில் ஒரு மாணவரும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன் மற்றும் ரபீக், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் வள்ளியம்மாள் மற்றும் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் கந்தபிரசாத் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us