தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இசை கல்லூரியில் 3 நாள் தமிழ் இசை விழா

அரசு இசை கல்லூரியில் 3 நாள் தமிழ் இசை விழா

அரசு இசை கல்லூரியில் 3 நாள் தமிழ் இசை விழா


UPDATED : பிப் 02, 2011 12:00 AM

ADDED : பிப் 02, 2011 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2011 12:00 AM ADDED : பிப் 02, 2011 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, தமிழ்நாடு அரசு இø கல்லூரியில், தமிழ் இசை விழா, வரும் 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை நடக்கிறது.


இது குறித்து, கல்லூரி முதல்வர் தஞ்சை நடராஜன் கூறியதாவது:
கல்லூரி சார்பாக, பிப்., 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள, தாகூர் கலையரங்கில் நடக்கிறது. இவ்விழாவில், கல்லூரியில் பணி புரிந்த மூத்த இசை கலைஞர்களுக்கு, ‘கலை நிறை வித்தகர் விருது’ வழங்கப்படுகிறது. விழாவை ஒட்டி பல்வேறு கலை, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில், ஏராளமான இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.


வேலை வாய்ப்பு அதிகம்: தமிழகத்தில் நான்கு இசை கல்லூரிகள் உள்ளன. சென்னை இசை கல்லூரி1949ல் துவங்கப்பட்டது. இங்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் மாணவ, மாணவியர் சேர்ந்து படித்து வருகின்றனர். பட்டயபடிப்பு, இசை ஆசிரியர் பயிற்சி ஆகியன வழங்கப்படுகிறது. 18 முதல் 22 வயதுடையவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


பெண்களுக்கு தங்கும் விடுதி வசதி உண்டு. பகல், இரவு நேர வகுப்புகள் உண்டு. கல்லூரியில் சேர ஜாதி, மதம் தடையில்லை. கல்வி தகுதி 8ம் வகுப்பு 10ம் வகுப்பு. கட்டணம் ஆண்டுக்கு 250 ரூபாய்.14 வகையான துறைகள் உள்ளன. 36 ஆசிரியர்கள், வருகை பேராசிரியர்களும் உண்டு. இங்கு பயின்று பிரபலம் அடைந்தவர்கள் பலர். வேலை வாய்ப்பு, சுய தொழில் பெறுவது எளிது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us