UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM
ADDED : ஜூன் 03, 2011 10:52 AM
அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், பி.இ., பட்டப்படிப்பிற்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பி.இ. படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் மூலம் நடத்தி வருகிறது.
அதே போல இந்த வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் மூலம் நடத்த உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 16 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த விண்ணப்பங்கள் தமிழநாடு முழூவதும் 62 மையங்களில் வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 3 - ந்தேதி கடைசி நாள்.
