முதுநிலை மருத்துவ கலந்தாய்வு; 3 நாட்களுக்கு விடுமுறை
முதுநிலை மருத்துவ கலந்தாய்வு; 3 நாட்களுக்கு விடுமுறை
UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 12:00 PM
அ நிறம் | அளவு
சென்னை
: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு,
மூன்று நாட்கள் விடுமுறைக்குப்பின்,
மீண்டும், ஏப்., 11ம்
தேதி துவங்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் நடந்து வந்தது. நான்காம் நாளான நேற்று, 89 இடங்கள் ஒதுக்கப்பட்டன; மீதம், 216 இடங்கள் உள்ளன.
இன்று யுகாதி விடுமுறை. அடுத்து, சனி, ஞாயிறு என்பதால், மூன்று நாள் விடுமுறைக்குப்பின், ஏப்., 11ம் தேதி, மீண்டும் கலந்தாய்வு துவங்கி, ஏப்., 12ம் தேதி நிறைவடையும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
