தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலையில் துணைவேந்தர் உட்பட 3 பதவிகள் காலி

பல்கலையில் துணைவேந்தர் உட்பட 3 பதவிகள் காலி

பல்கலையில் துணைவேந்தர் உட்பட 3 பதவிகள் காலி


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளும், துணைவேந்தர் பதவியும் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன.தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் என்ற பி.எட்., படிப்பை நடத்துகின்றன. இவை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த பல்கலையில் தான், ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு கடந்த எட்டு மாதங்களாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பல்கலை நிர்வாகத்தை கவனிக்கும் பதிவாளர் பணியும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. இந்த பதவிகளில், சில பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, நிர்வாக பணிகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், வழக்கமான சில பணிகளை தவிர, பல்கலையின் முன்னேற்றம், ஆசிரியர் நியமனம், புதிய பாடப்பிரிவு துவங்குவதல் போன்ற, வளர்ச்சி பணிகள் நடக்காமல் முடங்கிஉள்ளன.இதுகுறித்து கல்வியியல் பல்கலையுடன் தொடர்புடைய கல்லுாரி ஆசிரியர்களும், கல்வியியல் கல்லுாரி நிர்வாகிகளும் கூறியதாவது:
பல்கலையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் பதவி காலியாகும்போது, 10 மாதங்கள் வரை வேறு யாரையும் நியமிப்பது இல்லை. பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு முறையான நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அரசு கல்லுாரிகள் மட்டுமின்றி தனியார் கல்லுாரிகளுக்கும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கவர்னரும் உயர்கல்வி அமைச்சரும் இந்த பிரச்னை குறித்து விரைந்து முடிவெடுத்து தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி உரிமையாளர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us