தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலைக்கு நவ. 3ல் கவர்னர் வருகை

அழகப்பா பல்கலைக்கு நவ. 3ல் கவர்னர் வருகை

அழகப்பா பல்கலைக்கு நவ. 3ல் கவர்னர் வருகை


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை.,க்கு கவர்னர் ஆர்.என். ரவி வருவதையொட்டி கட்டடங்களில் இருந்த தேன்கூட்டை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் நவ.3ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார். ஜி 20 மாநாட்டில் விவாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சத்தின் ஒரு பகுதியான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி குறித்த சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி, திருவாரூர் மத்திய பல்கலை., துணைவேந்தர் எம். கிருஷ்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலை., துணைவேந்தர் எம். செல்வம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர். ஜெயகாந்தன், பேராசிரியர் அருண் செய்து வருகின்றனர்.உதவி ஏ.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். விழா அரங்கு கட்டடத்தில் தேன் கூடுகள் இருந்தது. தீயணைப்பு துறையினர் தேன்கூடுகளை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us