பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 30 பேர் குரூப் 4ல் வெற்றி
பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 30 பேர் குரூப் 4ல் வெற்றி
UPDATED : மே 03, 2026 02:37 PM
ADDED : மே 03, 2026 02:38 PM
நாமக்கல்:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதியவர்களில், 30 பேர் தேர்ச்சி பெற்றனர். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 போட்டித்தேர்வுக்கான, ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வந்து படித்து வருகின்றனர்.
அதன்படி, 2025ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், ஏராளமான தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவில், 30 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், கோ-ஆப்பரேடிவ் உதவியாளர் பணிக்கான தேர்வில், 23 பேர், பி.ஜி., டி.ஆர்.பி., கெமிஸ்ட்ரி தேர்வில், 2 பேர் என, மொத்தம், 45 பேர் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதே போல், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி., தேர்வில், 19 பேர் தேர்ச்சி பெற்று, இறுதி தேர்வுக்கு காத்திருக்கின்றனர்.
