தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 30000 இடங்கள்

பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 30000 இடங்கள்

பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 30000 இடங்கள்


UPDATED : மே 13, 2011 12:00 AM

ADDED : மே 13, 2011 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2011 12:00 AM ADDED : மே 13, 2011 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "பொறியியல் கல்லூரிகளுக்கு, கூடுதலாக, 30 ஆயிரம் இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.


தமிழகத்தில், 486 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில், 65 சதவீத இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், 486 கல்லூரிகளும், வரும் கல்வியாண்டில் கூடுதல் இடங்கள் கேட்டு ஏ.ஐ.சி.டி.இ -க்கு விண்ணப்பித்துள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது, "30,000 இடங்கள் கூடுதலாக ஒதுக்கக்கோரி, ஏ.ஐ.சி.டி.இ -யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.


இதற்கு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைத்துவிட்டால், கவுன்சிலிங் ஒதுக்கீட்டு இடங்கள் மேலும் அதிகரிக்கும். வரும் 16ம் தேதி முதல், பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக தேவைப்பட்டால் வழங்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us