UPDATED : அக் 28, 2020 12:00 AM
ADDED : அக் 28, 2020 07:49 AM
அ நிறம் | அளவு
கோவை:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் செயல்படும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பல்வேறு பாட பிரிவுகளில், மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள், தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரலாம்.தற்போதைய நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
