அரசு கல்லூரி விடுதியில் 37 மாணவியர் வாந்தி, மயக்கம்
அரசு கல்லூரி விடுதியில் 37 மாணவியர் வாந்தி, மயக்கம்
UPDATED : அக் 14, 2015 12:00 AM
ADDED : அக் 14, 2015 10:53 AM
சென்னை
: அரசு
கல்லுாரி விடுதியில், 37 மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, விடுதியில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
சென்னை, எழும்பூர் பின்னி சாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு கல்லுாரியில், ஏராளமான மாணவியர் படிக்கின்றனர். தரமற்ற காய்கறிகள் மாணவியருக்காக, கல்லுாரியில் விடுதி உள்ளது; இங்கு, 400க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவியர் பலருக்கு, அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில், 37 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 32 பேர் சிகிச்சை முடிந்து, விடுதிக்கு நேற்று திரும்பினர்; ஐந்து பேருக்கு சிகிச்சை தொடர்கிறது.
இது பற்றி நேற்று தகவல் அறிந்ததும், கல்லுாரி விடுதிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவியரிடம் விசாரித்தனர். நேற்று முன்தினம், இரவு உணவாக சாதம், முள்ளங்கி சாம்பார், பீட்ரூட் பொறியல் வழங்கப்பட்டது தெரிய வந்தது. தரமற்ற காய்கறிகள், எண்ணெய் பயன்படுத்தப்பட்டதா என, விசாரித்தனர்.
பின், விடுதி சமையல் அறை, உணவுப் பொருட்கள் சேமிப்பு அறை, தண்ணீர் தொட்டி போன்ற வற்றை ஆய்வு செய்தனர். தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவான பிரிஞ்சி, உப்புமா மற்றும் சமையல் எண்ணெய், குடிநீர், வனஸ்பதி என, ஐந்து மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக, உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினர்.
நோட்டீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
உணவு மாதிரி முடிவுகள் கிடைக்க, 15 நாட்களாகும்; முடிவுகள் வந்த பின், நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி, 15 நாட்களுக்குள், உணவகத்தில் போதிய வசதிகளை மேம்படுத்த, நோட்டீஸ் அளித்துள்ளோம்; விடுதி உணவகம், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
