டி.சி.எஸ். நிறுவனத்திற்கு புதிதாக 37,000௦௦௦ பணியாளர்கள்
டி.சி.எஸ். நிறுவனத்திற்கு புதிதாக 37,000௦௦௦ பணியாளர்கள்
UPDATED : ஜன 19, 2011 12:00 AM
ADDED : ஜன 19, 2011 04:04 PM
இந்நிறுவனம், அடுத்த(2011-12) நிதியாண்டில், 37,௦௦௦௦௦௦000 நிபுணர்களை பணியமர்த்த உள்ளது.
கல்வி நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி, அதன்மூலம் இந்த எண்ணிக்கையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை டி.சி.எஸ்., நாடு முழுவதும் 171 கல்வி நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. கடந்த வருடம் டி.சி.எஸ்., 27,500 நிபுணர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணிக்கு எடுத்தது.
பணியாளர்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் வரும் நாட்களில் இந்த தேவை இன்னும் அதிகரிக்கும் என்று டி.சி.எஸ். அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ்., கடந்த வருட டிசம்பர் முடிவிலான காலகட்டம் வரை, தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையை 1,86,914 என்ற அளவில் உயர்த்தியுள்ளது.
தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பணியாளர் எண்ணிக்கை முன்பைவிட சற்று குறைந்திருந்தாலும், ஊழியர்களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று டி.சி.எஸ். நிறுவன மேலாண்மை இயக்குனர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.
