தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் 'ஆஸ்டிடியூட்' வகுப்பு நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தனி பயிற்சி: நிறுவனர் செந்தில்குமார் தகவல்

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் 'ஆஸ்டிடியூட்' வகுப்பு நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தனி பயிற்சி: நிறுவனர் செந்தில்குமார் தகவல்

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் 'ஆஸ்டிடியூட்' வகுப்பு நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தனி பயிற்சி: நிறுவனர் செந்தில்குமார் தகவல்


UPDATED : அக் 16, 2026 05:08 PM

ADDED : அக் 16, 2026 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:08 PM ADDED : அக் 16, 2026 05:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'ஆஸ்டிடியூட்' வகுப்பு மூலம் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கான பவுண்டேஷன் வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளியின் நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:


கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி கடந்த 6 கல்வி ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதப்படி வகுப்புகள் நடத்தப்படுவதால், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காக மொழி, அறிவியல், கணினி மற்றும் 'ஏஐ' ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் உள்ளன. ஸ்மார்ட் பலகைகள் மூலம் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

மெய்நிகர் ஆய்வகம் எனப்படும் 'விர்ச்சுவல் லேப்', மேம்பாடு கருவிகளுடன் அதிநவீன ஆய்வகம், பன்முக மொழித்திறன்களை மேம்படுத்த 'ஆடியோ விசூயூவல் லேங்குவேஜ் மினி தியேட்டர்', ஆடிட்டோரியம் உள்ளது.

மாணவர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக 'ஆஸ்டிடியூட்' என்ற வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜே.இ.இ., நீட் மற்றும் ஜே.ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கான பவுண்டேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, கேரளா மற்றும் சென்னையில் இருந்து அனுபவமிக்க ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த பரதநாட்டியம், நடனம், இசை வகுப்புகள், மேற்கத்திய நடனம், விளையாட்டு திறனை மேம்படுத்த வில்வித்தை, சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே வகுப்புகள் மனதை ஒருமுகப்படுத்த யோகா பயிற்சி, கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளிமாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக வாரந்தோறும் சனிக்கிழமை மாற்று வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாதந்தோறும் உடல் ஆரோக்கிய வகுப்புகளும், கண் மற்றும் பல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளை மாதந்தோறும் தவறாமல் மேற்கொள்கின்றனர். சிறந்த தலைமை பண்புடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜே.எஸ்., பள்ளி செயல்படுகிறது.

இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us