வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்
வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்
UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 09:43 AM
கோவை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் உள்ளிட்ட, 6,244 காலி பணியிடங்களுக்கு, குரூப் 4 தேர்வு, ஜூன் 9ல் நடைபெற உள்ளது. இதற்கு, https://www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரி வாயிலாக, வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.இத்தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்க, இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 12ம் தேதி துவக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள அனைவரும் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில், பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி அட்டவணை, வாரத்தேர்வு, முழு மாதிரித்தேர்வு நடத்தப்படும். https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து, பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன், கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்துக்கு வரும், 12ல் நேரில் வர வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.