UPDATED : அக் 14, 2015 12:00 AM
ADDED : அக் 14, 2015 10:38 AM
திருத்தணி
: திருவள்ளூர்
மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஆதார் கார்டுக்கு
புகைப்படம் எடுக்க, மொத்தம், 43 பள்ளிகளில், நாளை முதல், இம்மாதம், 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்பாலான மாணவர்கள் ஆதார் கார்டு பெறவில்லை. இதனால், மாணவர்கள் நலன்கருதி, நாளை (15ம் தேதி) முதல், இம்மாதம், 31ம் தேதி வரை மொத்தம் 43 பள்ளிகளில் சிறப்பு முகாம், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்கப்படுகிறது.
பள்ளி வேலை நாட்களில், மாணவர்களும், விடுமுறை நாட்களில், மாணவர்களுடன் பெற்றோரும் புகைப்படும் எடுத்துக் கொள்ளலாம். 43 சிறப்பு மையங்களில் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 50 மாணவர்கள் வீதம் புகைப்படம் எடுக்கப்படும். இந்த சிறப்பு முகாமில் ஆதார் கார்டு பெறாத மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் மட்டும் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆதார் கார்டு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, கல்வி ஊக்கத்தொகை போன்ற அரசு நலத்திட்டங்கள் நேரடியாக, வங்கி மற்றும் அஞ்சலகத்தில், மாணவர்கள் கணக்கில் வரவு வைப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக ஆதார் கார்டு வழங்கப்படவுள்ளது என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
