தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கிக்கு தனி இடம் உண்டு. இந்தியாவெங்கும் அதிக எண்ணிக்கையிலான கிளைகள், முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஸ்டேட் பாக்கிற்கு ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் என்ற அஸோசியேட் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் 4987 புரொபேஷனரி அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது:
ஸ்டேட் பாங்க்கின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.05.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.06.1981க்குப் பின்னரும் 01.06.1990க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை:
ஸ்டேட் பாங்க்  அஸோசியேட் வங்கிகளின் அதிகாரி பதவிக்கு இரண்டு கட்டமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்வாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் மற்றும் டெஸ்கிரிப்டிவ் என்று இரு பகுதிகள் இருக்கும்.


2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய அப்ஜெக்டிவ் தேர்வில் டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ், ஜெனரல் அவேர்னஸ்  மார்க்கெட்டிங் மற்றும் கம்ப்யூட்டர்ஸ், டெஸ்ட் ஆப் டேட்டா அனலிசிஸ் அண்டு இண்டர்பிரடேசன், டெஸ்ட் ஆப் ரீசனிங் (ஹை லெவல்) ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். ஒரு மணி நேர அவகாசத்தில் முடிக்க வேண்டிய டெஸ்கிரிப்டிவ் தேர்வில் காம்ப்ரிஹென்சன், சிறிய சுருக்கி வரைதல், கடிதம் எழுதுவது மற்றும் கட்டுரை எழுதுவது ஆகியவற்றை உள்ளடக்கிய டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ் இடம் பெறும்.


இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2வது கட்டத் தேர்வான குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு வரும். இவற்றில் குழு விவாதத்துக்கு 20 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 30 மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 50 மதிப்பெண்களுக்கான தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 07.08.2011 அன்று தமிழ் நாட்டின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மையங்களிலும், புதுச்சேரி, பெங்களூரு, கொச்சி, கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய மையங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.500/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் பரிந்துரை செய்யப்பட்ட கேஷ் சலானின் மூலமாக கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த சலானை இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெறலாம்.


விண்ணப்பிப்பது எப்படி:
ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளுக்கான புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவிற்கு என்று சில நிபந்தனைகளை இந்த வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் விண்ணப்பத்தின் பிரின்ட் அவுட்டைப் போதுமான நகல்கள் எடுத்து பத்திரப்படுத்தவும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற நிலைகளில் இது கட்டாயம் தேவைப்படும்.


ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 25.06.2011
முழு விபரங்களறியும் இணைய தள முகவரி: www.statebankofindia.com; www.sbi.co.in; www.timesjobs.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us