UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM
ADDED : ஜூலை 27, 2011 10:28 AM
முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற மாணவர்களில் 5 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவில்லை. இதனால் உருவான 5 காலியிடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிசி பிரிவில் ஒரு இடமும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பிசி பிரிவில் ஒரு இடமும், திருச்சி கே.ஏ.பி.வி. மருத்துவக் கல்லூரியில் எஸ்.சி. பிரிவில் ஒரு இடமும், தர்மபுரி டி.எம்.சி.யில் பிசி பிரிவில் ஒரு இடமும், திருவாரூர் டி.எம்.சி.யில் எஸ்சி பிரிவில் ஒரு இடமும் காலியாக உள்ளன.
ஆகமொத்தம் பிசி பிரிவினருக்கு 3 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. மேலும், நீதிமன்றத்தின் ஆணையின்படி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.சி.யினருக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
