UPDATED : ஜன 06, 2026 07:13 PM
ADDED : ஜன 06, 2026 07:14 PM
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., 59வது வார்டு செயலாளர் மணிகண்டன் தலைமையில், தாதகாப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில், எம்.ஜி.ஆர்., மகளிர் இலவச தையல் பயிற்சி கூடம் மற்றும் வேலைவாய்ப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவ., 3ல் இருந்து செயல்பட்டு வரும் மையத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் சுயதெழில் செய்து, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் நவீன ஆடை வடிவமைக்கும் வகையில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இரண்டு மாத தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் சேர்க்கையில், 60 நாட்கள் பயிற்சி முடித்த 50 மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இல்லத்தில் நடந்த நிகழ்சியில், 50 மகளிருக்கு சான்றிதழ் வழங்கி இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜூ, புறநகர் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வினோத், பகுதி துணை செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
