UPDATED : மே 03, 2025 12:00 AM
ADDED : மே 03, 2025 03:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஷ்மீரே கேட்:
பெண்களுக்கான இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகத்தைக் கட்டுவதற்காக, நரேலாவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவன தினம் மற்றும் 4வது ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழாவின்போது இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டார்.
நரேலா துணை நகரத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வி நகரத்தை உருவாக்க மாநில பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு இந்த பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

