தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலை கல்லுாரியில் 510 பேருக்கு அட்மிஷன்

அரசு கலை கல்லுாரியில் 510 பேருக்கு அட்மிஷன்

அரசு கலை கல்லுாரியில் 510 பேருக்கு அட்மிஷன்


UPDATED : ஜூன் 09, 2026 05:22 AM

ADDED : ஜூன் 09, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 05:22 AM ADDED : ஜூன் 09, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அரசு கலைக் கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை பொதுக்கலந்தாய்வு நேற்று துவங்கியது.

தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களைத் தவிர மற்ற அனைத்து பாடங்களுக்கும், 300 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

கலைப்பிரிவுகளில் 870, அறிவியல் பிரிவுகளில் 260 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் உள்ள 1,727 இடங் களில், 510 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.

தற்போது பி.எஸ்.சி., உளவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம், பி.காம்., பி.காம்., (கணினி பயன்பாடுகள்), பி.காம்., (சர்வதேச வணிகம்) மற்றும் பி.பி.ஏ., ஆகிய படிப்புகளில் குறைந்த இடங்களே மீதமுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இன்று நடைபெறும் கலந்தாய்வில் 260 மற்றும் அதற்கு மேற்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us