தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐஐடி மெட்ராஸ் ல் 60வது பட்டமளிப்பு விழா

ஐஐடி மெட்ராஸ் ல் 60வது பட்டமளிப்பு விழா

ஐஐடி மெட்ராஸ் ல் 60வது பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM

ADDED : ஜூலை 22, 2023 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM ADDED : ஜூலை 22, 2023 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஐஐடி மெட்ராஸ் ன் 60வது பட்டமளிப்பு விழா, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2 ஆயிரத்து 573 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுக் கொண்டனர். பட்டதாரிகளுக்கு ஐஐடி மெட்ராஸ் இயக்குனர், பேராசியர் காமகோடி பட்டங்களை வழங்கினார். விழாவில் இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய ஒய்.சந்திரசூட், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய ஒய்.சந்திரசூட் பேசுகையில், கடந்த 64 ஆண்டுகளாக ஐஐடி மெட்ராஸ் பல்கலை, அதிநவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி என பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. இதில் பயின்று வெளிவரும் மாணவர்கள் உலளவில் சாதனை புரிகின்றனர், என்றார். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி பேசியதாவது:
ஐஐடி மெட்ராஸ் பல்கலை., அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தை வகுத்து, அதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். கல்வி சக்தி, வித்யா சக்தி என பெயரிடப்பட்டுள்ள இத்திட்ட முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம் மாநிலங்களிலுள்ள 5 முதல் 12 வகுப்பு வரையான 12 ஆயிரம் பள்ளி  மாணவ, மாணவியரை சென்றடைந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள், தமிழ், ஹிந்தி மீடியம்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன. சுமார் 3 ஆயிரத்து 200 மாணவர்கள் இத்திட்டதில் பயனடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதமும் 98 சதவீதமாக உள்ளது. இத்திட்டத்தை மேலும் 8 மாநிலங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.பி.எச்டி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் வழங்கப்படும் இணை பி.எச்டி மற்றும் இரட்டை பி.எச்டி என 453 பட்டங்கள் வழங்கப்பட்டன. இணை மற்றும் இரட்டைப் பட்டங்கள் உள்பட 2 ஆயிரத்து 746 பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ஐஐடி மெட்ராஸ் நிர்வாக குழுத் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா தலைமை வகித்தார். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us