தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த தமிழக மாணவர்

சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த தமிழக மாணவர்

சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த தமிழக மாணவர்


UPDATED : ஆக 04, 2020 12:00 AM

ADDED : ஆக 04, 2020 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2020 12:00 AM ADDED : ஆக 04, 2020 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர். மதுரையில் கேந்திர வித்தியாலயாவில படித்துள்ளார். தற்போது இவர் நாகர்கோவில் புன்னைநகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை மத்திய அரசில் உயர் அதிகாரியாவார்.
கடந்த 2019ம் செப்., மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக நடந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வை 829 பேர் எழுதினர். இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை கடந்த பிப்., ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களில் பிரதீபா வர்மா என்பவர் முதலாவதாக வந்துள்ளார். 
கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 வது இடம் பிடித்துள்ளார். தமிழகளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில், 78 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 11 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும். இந்த ஆண்டிற்கான தேர்வு மே 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு, அக்.,4க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us