UPDATED : நவ 21, 2009 12:00 AM
ADDED : நவ 21, 2009 01:51 PM
அ நிறம் | அளவு
அரசுத்துறைகளில் உத்தரவுகள், அறிக்கைகள், கோப்புகள் உள்ளிட்டவற்றில் தமிழ் மொழி எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வு நடத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறையில் தமிழ் பயன்பாடு குறித்து டி.பி.ஐ. வளாகத்தில் ஆய்வு நடந்தது.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் எழிலரசு, உதவி இயக்குநர் குமார் ஆகியோர் பள்ளிக் கல்வித்துரையில் எந்த அளவிற்கு தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ராமேஸ்வர முருகன், துறையில் தமிழ் மொழி பயன்பாடு குறித்து விளக்கிக் கூறினர்.
ஆய்வின் முடிவில், பள்ளிக் கல்வித்துறையில் 87 சதவீதம் அளவிற்கு தமிழ் மொழி வாயிலாக நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
