தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைகளில் ஆராய்ச்சி மேம்படுத்த ரூ.9 கோடி: மத்திய அரசு உதவி

பல்கலைகளில் ஆராய்ச்சி மேம்படுத்த ரூ.9 கோடி: மத்திய அரசு உதவி

பல்கலைகளில் ஆராய்ச்சி மேம்படுத்த ரூ.9 கோடி: மத்திய அரசு உதவி


UPDATED : டிச 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர்கள் மற்றும் கல்விக் குழுவினர் கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், பட்டியலில் இடம் பெற்றுள்ள 14 பல்கலைக்கழகங்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக, சென்னை பல்கலைக் கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை தலா ஒன்பது கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 12 பல்கலைக் கழகங்களுக்கு ஆறு கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி உபகரணங்கள், சோதனைக்கூட கட்டமைப்பு உள்ளிட்ட ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்கு மட்டும் இந்நிதியை பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள ஆராய்ச்சி திட்ட வரைவுகளை வழங்குமாறும் அறிவியல், தொழில் நுட்பத் துறை கேட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு மன்னன் ஜவகர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us