தமிழக பள்ளி கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் மாற்றம்
தமிழக பள்ளி கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் மாற்றம்
UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 11:48 AM

சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி பணியில் இணை இயக்குனர்கள் 9 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன் நேற்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குனர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
* தொடக்கக் கல்வி இணை இயக்குனர் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
* பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக பணியாற்றும் ச.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக்கல்வி இணை இயக்குனராக (நிர்வாகம்) பணியமர்த்தப்படுகிறார்.
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராக (நிர்வாகம்) உள்ள அ.ஞானகவுரி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குனராக (மேல்நிலைக்கல்வி) நியமிக்கப்படுகிறார்.
* தொடக்கக்கல்வி இணை இயக்குனராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியாற்றி வரும் க.ஸ்ரீதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* தனியார் பள்ளிகள் இணை இயக்குனரான செ.சாந்தி மாற்றப்பட்டு தொடக்கக்கல்வி இணை இயக்குனராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) நியமிக்கப்படுகிறார்.
* பள்ளிக் கல்வி இணை இயக்குனரான (தொழிற்கல்வி) எம்.ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளிகள் இணை இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனராக பணியாற்றி வரும் வெ.ஜெயக்குமார் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குனராக (தொழிற்கல்வி) நியமிக்கப்படுகிறார்.
* ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனரான கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்ப[ட்டு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மற்றொரு இணை இயக்குனரான ந.ஆனந்தி மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.