தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் 98 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் 98 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் 98 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்பு


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள, தொடக்க கல்வி அலுவலகத்தில், நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில், 98 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகா கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் பங்கேற்க, மொத்தம், 98 ஆசிரிய, ஆசிரியைகள் விருப்பமனு வழங்கி உள்ளனர். முதல் மண்டலமான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை மற்றும், இரண்டாவது மண்டலமான, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மூன்றாவது மண்டலத்தை சேர்ந்த, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், பாடவாரியாக கவுன்சலிங்கில் பங்கேற்றனர்.

மொத்தம், 98 விண்ணப்பங்கள், இந்த மூன்று மண்டலத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அடங்கிய, நான்காவது மண்டலத்தில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்கள் எவரும், கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்ற, இந்த கலந்தாய்வில், மொழிப்பாடங்கள், சமூக அறிவியலை காட்டிலும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில்தான், ஆசிரியர்கள் அதிகளவில், கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us