தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடல்

கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடல்

கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடல்


UPDATED : மே 09, 2011 12:00 AM

ADDED : மே 09, 2011 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2011 12:00 AM ADDED : மே 09, 2011 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், "கல்வி உரிமைக்கான களம்" என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது.


கூட்டத்தில் முன்னாள் துணை வேந்தர்கள் வசந்திதேவி, முத்துக்குமரன், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சமூக ஆர்வலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வசந்திதேவி பேசும்போது, "கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டு முடிந்தும், அச்சட்டத்தை அமல்படுத்த அரசு முன்வரவில்லை.சட்டத்தை பற்றிய போதுமான விழிப்புணர்வு கல்வித்துறை அதிகாரிகளுக்கே இல்லை. சட்டத்தின் எதிர்கால திட்டம் குறித்தும், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி குறித்த புள்ளிவிவரத்தையும் கேட்க வேண்டும். விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பள்ளிகளில் இருக்கிறதா என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும்&'&' என்றார்.


முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் பேசும்போது, "அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். தமிழகத்தில் 51 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அதில், 16 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்&'&' என்றார்.
கல்வியாளர் மீனா சுவாமிநாதன் பேசும்போது, "கல்வி உரிமைக்கான சட்டம் குறித்த விளம்பரம் பொதுமக்களிடம் சென்றடையவில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படவில்லை. அரசுதான் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும்&'&' என்றார்.


பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, "அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களாக உருவாகின்றனர். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேலைக்காக மட்டுமே படிக்கின்றனர். திறமையை வளர்ப்பதில்லை.
அரசு பள்ளிகளில் படிக்கும் பத்து மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது தனியார் பள்ளியில் படிப்பதற்கு கல்வி கட்டணம் தரப்படும் என்ற அரசின் அறிவிப்பால், அரசு பள்ளிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்து, தனியார் பள்ளியை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் காணாமல் போய்விடும்&'&' என்றார்.


கூட்டத்தில், "கல்வி உரிமை சட்டத்தின் நடைமுறை பற்றி வெள்ளை அறிக்கை தர வேண்டும். இந்த சட்டத்திற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை தவறான முறையில் பிரசாரம் செய்யும் பள்ளிகள் மீதும், இடஒதுக்கீடு செய்ய முன்வராத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us