UPDATED : மே 09, 2011 12:00 AM
ADDED : மே 09, 2011 02:43 PM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
தமிழ் மொழிப் பாடத்தில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.
ஆங்கிலம் ரேங்க் லிஸ்ட் : ஆங்கில மொழி பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மாணவி கே.ரேகா ஆங்கிலத்தில் 200க்கு 195 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தையும் ஓசூர் விஜய வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிதான் பெற்றுள்ளார். 2ம் இடம் பிடித்த மாணவியின் பெயர் பி.எஸ்.ரேகா. இவர் பெற்ற மார்க் 195. மொத்த மதிப்பெண் : 1186. ஆங்கிலத்தில் 3வது இடத்தை சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா பிடித்துள்ளார்.
இயற்பியல் ரேங்க் லிஸ்ட் : இயற்பியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.3வது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இயற்பியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1188.
வேதியியல் ரேங்க் லிஸ்ட் : வேதியியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.3வது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.
கணிதம் ரேங்க் லிஸ்ட் : ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா கணித பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.3வது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.
புள்ளியியல் ரேங்க் லிஸ்ட் : புள்ளியியல் பாடத்தில் சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 2 மற்றும் 3 ம் இடங்களையும் இதே பள்ளி மாணவர் சந்தோஷ், மாணவி சவுமியா முறையே பெற்றுள்ளனர். இவர்களும் 200க் 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
தாவரவியல் ரேங்க் லிஸ்ட் : தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1167. இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1150. 3வது இடத்தை அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதி பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1094. தாவரவியலில் இவர் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.
விலங்கியல் ரேங்க் லிஸ்ட் : இந்த ஆண்டு விலங்கியல் பாடத்தில் ஓருவர் கூட சென்டம் ( முழு மதிப்பெண் ) பெறவில்லை. 200க்கு 199 மார்க்குகள் பெற்று சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இவத்தை சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க் 1082. விலங்கியல் பாடத்தில் இவர் பெற்ற மதிப்பெண் 199. கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1089 .
கணினி அறிவியல் ரேங்க் லிஸ்ட் : கணினி அறிவியல் பாடத்தில் செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200க்கு 200 பெற்று முதல் மார்க் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. 2வது இடத்தை கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா பெற்றுள்ளார். கணிணி அறிவியிலில் 200 மார்க்குகள் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1181. மூன்றாவது இடத்தை திருச்சி ஆர்.எஸ்.கே., பள்ளி மாணவி திவ்யா பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1174. கணினி அறிவியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.
புவியியல் ரேங்க் லிஸ்ட் : புவியியல் பாடத்தில் எந்த ஒரு மாணவ, மாணவியும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை. 200க்கு 199 மார்க்குகள் பெற்று சென்னை எல்.எப்.சி., மேல்நிலைப் பள்ளி ( கண்பார்வையற்றவர்களுக்காகன சிறப்பு பள்ளி) மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளனர். பி.ஏ., சங்கீதா முதலிடம் பெற்றுள்ளார். புவியியல் மார்க் - 199. மொத்த மார்க் 1095. 2வது இடம் எஸ்.துர்கா தேவி. புவியியல் மார்க் - 199. மொத்த மதிப்பெண் 1077. 3வது இடம் டி. வென்னிலா. புவியியல் பாடம் : 199. மொத்த மதிப்பெண் 1084.
புள்ளியியல் ரேங்க் லிஸ்ட் : புள்ளியியல் பாடத்தில் சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 2 மற்றும் 3 ம் இடங்களையும் இதே பள்ளி மாணவர் சந்தோஷ், மாணவி சவுமியா முறையே பெற்றுள்ளனர். இவர்களும் 200க் 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
அடிப்படை அறிவியல் ரேங்க் லிஸ்ட் : அடிப்படை அறிவியல் பாடத்தில் திண்டுக்கல் மாணவி ஜெ. லயோலா 200க்கு 193 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1072. 2 வது இடத்தை200க்கு 191 மார்க்குகள் பெற்று குளித்துறை மார்த்தாண்டம் எல்.எம்.எஸ்., பள்ளி மாணவி கே.சந்தியா பெற்றுள்ளார். 3வது இடத்தை திருநெல்வேலி பாளையம்கோட்டை புனித இக்னேசியஸ் பள்ளி மாணவி ஏ.மஞ்சு பெற்றுள்ளார். இவர் 20க்கு 186 மார்க்குகள் பெற்றுள்ளார்.
நர்சிங் பாடம் ரேங்க் லிஸ்ட் : நர்சிங் பாடத்தில் தூத்துக்குடி எஸ்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யசோதை 200க்கு 196 மார்க்குகள் பெற்று முதலிடத்தையும், நிவேதா 193 மார்க்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2வது இடத்தை கோவை இமாகுலேட் மெட்ரிக் பள்ளி மாணவி சிந்து195 மார்க்குகள் பெற்று பிடித்துள்ளார்.
பயோ கெமிஸ்டிரி ரேங்க் லிஸ்ட் : பயோ கெமிஸ்ட்ரி பாடத்தில் சென்னை அண்ணாநகர் ( கிழக்கு ) வேலம்மாள் பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தை எஸ்.சுபமதி பெற்றுள்ளார். 200க்கு 192 மார்க்குகள் பெற்றுள்ளார். காவ்யா 187 மார்க்குகளுடன் 2ம் இடத்தையும், கீர்த்தி 185 மார்க்ககுள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மைக்ரோ பயாலஜி ரேங்க் லிஸ்ட் : மைக்ரோ பயாலஜி பாடத்தில் சென்னை புனித வின்சென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மாணவர் அர்ஜூன் ராஜ் 200க்கு 194 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் வருண் 191 மார்க்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை சி.எஸ்.ஐ., ஏவார்ட் மெட்ரிக் பள்ளி மாணவர் கிரண் ஷர்மா 190 மார்க்குகள் பெற்று பிடித்துள்ளார்.
பொருளாதாரம் பாடம் ரேங்க் லிஸ்ட் : பொருளாதாரம் பாடத்தில் சென்னை மாணவர் முலிடம் பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2ம் இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3வது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார்.
வணிகவியல் ரேங்க் லிஸ்ட் : வணிகவியல் பாடத்தில் சென்னை மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2ம் இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3வது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார்.
அக்கவுன்டன்சி பாடம் ரேங்க் லிஸ்ட் : அக்கவுன்டன்சி பாடத்தில் சென்னை மாணவர் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2ம் இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3வது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனியும், சென்னை அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி நித்யா பினோய் மாணவனும் பெற்றுள்ளனர்.
வரலாறு பாடம் ரேங்க் லிஸ்ட் : வரலாறு பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று உத்தமபாளையம் கே.வி.ஏ., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.மஞ்சுப்பிரியா முதலிடம் பெற்றுள்ளார். 2வது இடத்தை சென்னை பென்டிக் பள்ளி மாணவி பொன்னி பெற்றுள்ளார். பொன்னி வரலாறு பாடத்தில் 190 மார்க்குகள் பெற்றுள்ளார். 3வது இடத்தை உத்தமபாளையம் பி,எச்.என். பள்ளி மாணவி பிரியவதனா பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 189.
கம்யூனிகேடிவ் இங்லீஸ் ரேங்க் லிஸ்ட் : கம்யூனிகேடிவ் இங்கிலீஸ் பாடத்தில் சென்னை சேக்ரட் ஹார்ட் பள்ளி மாணவிகள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். முதல் இடத்தை சுப்ரஜா நாகரத்தினம் பிடித்துள்ளார். இவர் 190 மார்க்குகள் பெற்றுள்ளார். 2வது இடத்தை சாரா தாமஸ் பெற்றுள்ளார். 3வது இடத்தை சென்னை சேட்பெட் பள்ளி மாணவன் ஆர்.யஷ்வந்த் பிடித்துள்ளார்.
நியூட்ரிசன் டையடிக்ஸ் ரேங்க் லிஸ்ட் : நியூட்ரிசன் பையடிக்ஸ் பாடப்பிரிவில் கோவை எஸ். அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தையும் பெற்றுள்ளனர். முதலிடத்தை 200க்கு 190 மார்க்குகளுடன் மடோனா பிடித்துள்ளார். 2வது இடத்தை 189 மார்க்குகள் பெற்று சூர்யா பெற்றுள்ளார். 3வது இடத்தை எஸ்.மேனகா பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் 188.
மனையியல் பாடம் ரேங்க் லிஸ்ட் : மனையியல் ( ஹோம் சயின்ஸ்) பாடத்தில் கோவை மாணவிகள் முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதல் இடம் மற்றும் மூன்றாம் இடத்தை கோவை எஸ்.அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காவ்யா மற்றும் சரண்யா பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் முறையே 192 மற்றும் 191 மார்க்குகள் பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தை கோவை பி. கான்வன்ட் பள்ளி மாணவி கே.தேனி 190 மார்க்குகள் பெற்று பிடித்துள்ளார்.
இந்திய கலாச்சாரம் பாடம் ரேங்க் லிஸ்ட்: இந்திய கலாச்சாரம் பாடத்தில் கோவில்பட்டி கழுகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் 200க்கு 185 மார்க்குகள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். திண்டுக்கல் தம்பித்தோட்டம் பள்ளி மாணவர் அரவிந்தன் 181 மார்க்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார். சேலம் பாரதி பள்ளி மாணவன் கார்த்திகேயன் 174 மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
சைகாலஜி பாடம் ரேங்க் லிஸ்ட் : சைகாலஜி ( உளவியல் ) பாடத்தில் சென்னை சவுகார்பேட்டை ஜி.ஜி.ஜெயின் பள்ளி மாணவி அஞ்சு 200க்கு 190 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2வது இடத்தை நெல்லை சார்ஜென்ட் பள்ளி மாணவி பவானி 186 மார்க்குகள் பெற்று பிடித்துள்ளார். தூத்துக்குடி காயல்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துமாரி 200க்கு 184 மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
சிறப்பு தமிழ் பாடம் : சிறப்பு தமிழ் பாடத்தில் தூத்துக்குடி எஸ்.வி., பள்ளி மாணவி சூர்யா 188 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2ம் இடத்தை கடலூர் மாணவி பிரியங்கா பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 184. நாமக்கல் அரசு பள்ளி மாணவி செல்வலட்சுமி 184 மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
வணிக கணிதம் பாடம் : பிசினஸ் கணிதம் பாடத்தில் சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2ம் இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3வது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனியும், அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி நித்ய பினோய் ஜோசப் ஆகியோரும் பெற்றுள்ளார்.
அரசியல் அறிவியல் பாடம் : அரசியல் அறிவியல் ( பொலிட்டிக்கல் சயின்ஸ் ) பாடத்தில் கோவில்பட்டி எஸ்.ஏ.நாடார் பள்ளி மாணவன் ஆனந்த் 200க்கு 192 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை மயிலாடுதுறை புனித பால்ஸ் பள்ளி மாணவி மோனிஷா பிடித்துள்ளார். இவரது மார்க் 200க்கு 190 ஆகும். தூத்துக்குடி கே.நாடார் பள்ளி மாணவி செல்வலட்சுமி 200க்கு 189 மார்க்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
சமஸ்கிருத பாடம் ரேங்க் லிஸ்ட் : சமஸ்கிருதம் மொழிப்பாடத்தில் செங்கல்பட்டு எஸ்.ஆர்.டி.பி. வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா 200க்கு 198 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத் மதிப்பெண் 1191. 2வது இடத்தை திருச்சி எஸ்.வி.இந்து பள்ளி மாணவி பாரதி பிரியா( மொத்த மதிப்பெண் - 1188) மற்றும் சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி மாணவி சுருதி கணேஷ் ( மொத்த மதிப்பெண் - 1188) ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 200க்கு 198 மார்க்குகள் எடுத்துள்ளனர். 3வது இடத்தை 3 மாணவர்கள் பிடித்துள்ளனர். சென்னை பொன்னேரி டி.ஏ.வி., பள்ளி மாணவி அர்ச்சனா ( மொத்த மதிப்பெண் - 1187) , சென்னை ஜி.ஆர்.டி., பள்ளி மாணவி சுபிக்ஷா ( மொத்த மதிப்பெண் - 1187), சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி சுபிக்ஷா ( மொத்த மதிப்பெண் - 1187) ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 200க்கு தலா 198 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
