தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேஷன் போட்டோகிராபர் படிப்பு....

பேஷன் போட்டோகிராபர் படிப்பு....

பேஷன் போட்டோகிராபர் படிப்பு....


UPDATED : மே 16, 2011 12:00 AM

ADDED : மே 16, 2011 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2011 12:00 AM ADDED : மே 16, 2011 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலைநயம், படைப்புணர்வு மிக்க துறையாக புகைப்படக்கலை கருதப்படுகிறது. இது நவீன காலத்தில் வேகமாக வளர்ந்து வரும், முக்கியமான துறையாகவும் இருக்கிறது. பொதுவாக போட்டோகிராபர்களில் கமர்சியல் போட்டோ கிராபர், இண்டஸ்டிரியல் போட்டோகிராபர், விளம்பர போட்டோகிராபர், அறிவியல் போட்டோகிராபர், பேஷன் போட்டோகிராபர், செய்தி போட்டோகிராபர், திருமண போட்டோகிராபர் என பல பிரிவுகள் உள்ளன.


உலகளவில் பணம் கொழிக்கும் பேஷன் துறைக்கென பிரத்யேக புகைப்பட கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் ஆங்கிலத்தில் பேஷன் போட்டோகிராபர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எடுக்கும் புகைப்படங்களே பல்வேறு பத்திரிகைகளின் அட்டை படமாக வெளிவருகிறது. மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், மேக்கப் போடுபவர்கள் ஆகியோர்களுடன் இணைந்து இவர்கள் குழுவாக பணியாற்ற வேண்டியிருக்கும். 


தேவையான தகுதிகள்
அடிப்படை ஆர்வம், திறமை இருந்தால் இத்துறையில் எளிதில் சாதிக்கலாம். இத்துறை சார்ந்த டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை முறையாக பயின்று இதில் நுழைந்தால் நல்ல நிலையை அடையலாம். கலை உணர்வு, படைப்புத் திறன் ஆகிய தகுதிகளோடு கேமரா, லென்ஸ், ஒளி அளவு ஆகிய தொழில்நுட்ப அம்சங்களையும் தெரிந்து கொள்வது இத்துறையில் ஜொலிக்க உதவும்.


வேலைவாய்ப்புகள்
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பேஷன் போட்டோகிராபர்களுக்கு நல்ல மவுசு உள்ளது. ஆரம்ப கட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய்முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பின் அனுபவம், தகுதி, திறமைக்கேற்ப ஊதியம் உயரும். லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் பேஷன் போட்டோகிராபர்களும் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்புகளும் உள்ளது. அனைவருக்கும் தேவையான துறையாக, புகைப்படக்கலை இருப்பதால், இதன் வளர்ச்சி வரும் காலங்களில் சிறப்பாகத்தான் இருக்கும்.


கல்விநிறுவனங்கள்
* ஜாமியா மிலியா இஸ்லாமியா, www.jmi.nic.in
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், www.nid.edu
* அகடமி பார் போட்டோகிராபிக் எக்சலன்ஸ், www.apexindia.net
* ஷேரி அகாடெமி ஆப் புரொபஷனல் போட்டோகிராபி, www.shariacademy.com
* லைட் அண்டு லைப் அகடமி, www.llacademy.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us